மழையோடு நீ! மழையாய் நான்
அந்தி நேரம் !
மெல்லிய தென்றல் காற்று !
அசைந்தாடும் மரங்கள் !
மழை பொழிவதற்கான ஆயததொடு வானமும்
இடியும் மின்னலும் அச்சுறுத்தினாலும்
அம்மாவை கட்டிபிடித்துக்கொண்டு
அர்ஜுனா! அர்ஜுனா! என சொல்லி மழையில் விளையாட தயாராய் குழந்தையும்!
தென்றலின் சீண்டலால் தனது வாசத்தை
வெளிகொணர்ந்த மன்னும்!
அழகிய இந்த பொழுதை ரசித்தவாறே மங்கைகளும்
அவர்களை ரசித்தவாறே இளையானர்களும் செல்ல அழகாய்
இருந்தது அந்தி நேரம்!!
மெலிதாய் ஆரம்பித்த மழை, சோவென வேகமாய்
பெய்ய!!
அனைவரும் முண்டியடித்து பேருந்து நிறுத்தத்தில் ஒதுங்க!
அங்கே ஒரு கை குழந்தை மழையில் விளையாட!!
குழந்தையோடு நானும் மழையில் விளையாட!
மழையோடு மழையாய் நீ வந்தாய் என் அருகில்!
உன்னை நனைததாலோ என்னவோ மழைக்கு வெட்கம் வந்து நின்றுவிட்டது!
மழைக்கு தெரியும் என் மனம்!
திரும்பவும் பெய்து, விலகிச்சென்ற உன்னை என்னிடம்
கொண்டுவந்தது மழை ! நான் மழையையும் உன்னையும் ரசிக்க!
நீயோ மழையை மட்டும் ரசித்தாய்!
நான் ஏங்கினேன் மழையாய் மாற!