ஒரு சபிக்கப்பட்டவனின் கதை
மனிதன் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் விட மேலானவன் என்பது அவனுடைய எண்ணம், ஏன் கர்வம் என்று கூட சொல்லலாம். ஆனால் அது உண்மை இல்லை என்பது அவனுக்கும் தெரியும். மனித மனங்களின் ஆழுக்குகளையும், அதன் ஏமாற்றங்களையும் வெள்ளிப்படுத்த, அவன் பல சூது வாதுகளை பயன்படுதினான். தான் வாழ பிறறை ஏமாற்றி வாழ ஆரம்பித்தான். அந்த ஏமாற்றமே மனிதனை பல விதங்களில், பல முகங்களை கொண்டு ஏமாற்ற முற்படுகிறான்.
நம் கதை நாயகனின் பெயர் அகரன். இவன் கதை உங்களின் கதையாக கூட இருக்கலாம், ஏன் உங்களின் வேதனைகளின் வெளிப்பாடாக கூட இந்த கதையை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த கலி யுகத்தில் எவன் ஒருவன் நல்லவனாக இருகிறானோ அவன் சபிக்கப்பட்டவனே. அந்த விதத்தில் என் கதை நாயகன் முழுவதும் சபிக்கப்பட்டவன் என்று சொல்ல முடியாது. இவனும் மற்றவர்களை போல பொய், சூது அனைத்தையும் முழுவதும் தெரிந்து கொண்டவனும் அல்ல, அவனுக்கு அது தெரியுமா? என்று அவனுக்கே கூட தெரியாது. குழப்பமாக இருகிறதா? என் நாயகனுக்கே கூட அது குழப்பமே. அவன் ஒரு தீவிர குழப்பவாதி, அவன் மற்றவர்களை குழப்ப மாட்டான், ஆனால் அந்த குழப்பங்கள் அவனுகுள்ளேயே நிகழ்ப்பவை.
என் சபிக்கப்பட்ட நாயகனின் குழப்பமான வாழ்க்கையில் நாமும் சற்று பயணம் செய்வோம்.
என் சபிக்கப்பட்ட நாயகன் பிறந்தது ஒரு சிரிய நகராட்சியான உடுமலைபேட்டையில். என் சபிக்கப்பட்ட நாயகன் அங்.. அகரன் (சபிக்கப்பட்டவன், நாயகன் என்று கூறி அவன் பெயரே மற்றந்தூவிடும் போல, இனி அகரன் என்றே அழைகப்படுவார் என் நாயகன்) பிறந்தது, வளர்வது எல்லமே உடுமலை தான்.
அவன் பிறந்த உடனேயே குழப்பங்கள் ஆரம்பம் ஆகின. அது தான் பெயர்க்குழப்பம். என்ன பெயர் வைப்பது தான் முதல் குழப்பம். அவனுடைய தாயும், தந்தையுமே அவன் வாழ்கையின் குழப்பங்களுக்கு ஆரம்பம். அதன் பிறகு அடுத்த குழப்பம் அவன் வளர்ந்த பிறகு எந்த பள்ளீயில் சேர்ப்பது? இதை அவன் வாழ்வில் ஒரு அறிவுக்குழப்பம் என்று சொல்லலாம்.
ஒரு வழியாக பள்ளியும் முடிவானது, அகரனும் பள்ளி செல்லும் நாள் வந்தது. அகரன் மற்ற குழந்தைகளை போல இல்லாமல் சமர்த்தாக பள்ளிக்குச்சென்றான். முதல் நாள் பள்ளியில் அவனுக்குக்கிடைத்த பட்டம் என்ன தெரியுமா….????
குழப்பங்களுடன் தொடரும்…….